போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ராஜகிரிய , ஒபேசேகரபுர சர்வோதய மாவத்தையில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.