(எம்.எப்.எம்.பஸீர்)

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளகையுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து  சி.ஐ.டி.யினர் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டு தொடர்பிலும் சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பிலும் விசாரிக்க  விஷேட சி.ஐ.டி. குழுவொன்று குருணாகல் பகுதிக்கு அனுப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் கீழ் அனுப்பட்டுள்ள இந்த குழு குருணாகலுக்கு சென்று தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் வரை சுமார் 35 வாக்கு மூலங்களை   இவ் விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. பதிவு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே  வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கருத்தடை செய்துள்ளாரா என்பதை பரிசீலுக்குமாரு வலியுறுத்தி மாலை வரை 238 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இதில் 202 முறைப்பாடுகள் குருணாகல் போதன வைத்தியசாலைக்கும், தம்புள்ளை ஆதார வைத்தியசாலை மற்றும் கலேவல தள வைத்தியசாலைகளுக்கு 36 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.