நேற்றைய முன்தினம் ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து இந்நத ரொக்கட் விண்ணில் ஏவப்பட்டது போது ரொக்கட் மின்னல் தாக்கத்துக்குள்ளாகியது.

அத்தோடு அன்று வானிலையில் ஏற்பட்ட  மோசமான நிலையயும் பெரிது படுத்தாமல் விண்ணில் ரொக்கட் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் ரொக்கட்டை மின்னல் ஒன்று தாக்கியது. 

இதை உறுதிசெய்த அதிகாரிகள், ரொக்கட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவித்தனர்.

தற்போது இந்த காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

அத்தோடு குறித்த ரொக்கட்டை விண்ணில் ஏவும் முயற்சி வெற்றிகரமாக நடாத்பட்டதாகவும் அதிகாரிகள் தெரவித்தனர்.

இதுபோல் 1969-ல் நாசாவின் அப்பல்லோ 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட சனி- 5 ரொக்கட்  ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. 

இது மனிதர்களைக் கொண்டு சென்ற ரொக்கட் ஆகும். அப்போது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

எனினும் விண்ணில் செலுத்தும் ரொக்கட்டுக்களை வடிவமைக்கும் போது விஞ்ஞானிகள் மின்னல் தாக்காதவாறும்,இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கையாண்டு இவ்வகையான ரொக்கட்டுகளை தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.