மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பெயார்லோன் தோட்ட 5 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (29) காலை 9 மணியளவில் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை நடத்தினர்.இப்போராட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டமானது கடந்த சில ஆண்டுகளாக  பெயாலோன் தோட்ட தொழிற்சாலை மூடிய நிலையில் இருப்பதால் அத்தோட்ட கொழுந்தினை வேறு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அவை புறக்கணிக்க படுவதால் சகல வசதிகளும் கொண்ட இத்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரிகள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் இப்பிரச்சனை குறித்து அத்தோட்ட உரிமையாளருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் தீர்வை உடன் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.