(செ.தேன்மொழி)

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் என்பவர் மல்வானை பகுதியில் வைத்து துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானை பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மல்வானையில் அமைந்துள்ள அவரது வீட்டை மேற்படி நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போதே அவரது வீட்டிலிருந்து குழல்- 12 ரக துப்பாக்கி ரவைகள் 93 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.