மொரிஸின் போராட்டம் வீணானது டெல்லியை வீழ்த்தியது குஜராத்

Published By: Raam

28 Apr, 2016 | 11:04 AM
image

 குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணி வெற்றிபெறுவதற்கு இறுதி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இதனால் குஜராத் அணி தனது 5ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் மெக்கல்லமும், ஸ்மித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் அதிரடியாக ஆடியதால் அந்த அணியின் ஓட்ட வேகம் உயர்ந்தது.



இந்த ஜோடி 54 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தது. இந்த ஆபத்தான ஜோடியை இம்ரான் தாஹிர் பிரித்தார். ஸ்மித் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 12ஆவது ஓவரில் மொரிஸ் பந்தில் மெக்கல்லம் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய ரெய்னா(2), கார்த்திக்(19) ஜடேஜா(4), இஷாத் கிஷான்(4) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் குஜராத் அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. இறுதியில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16 ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பிறகு மொரிஸ் மற்றும் டுமினி ஆகியோர் ஜோடி சேர்ந்து டெல்லி அணியை மீட்டெடுத்தனர். இதில் டுமினி 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி வந்த மொரிஸ் அணியின் வெற்றிக்கு பெரிதும் போராடினார். இறுதியில் கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனாலும் 13 ஓட்டங்களையே டெல்லியால் பெற முடிந்தது. இதனால் 1 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவிக்கொண்டது டெல்லி.

இறுதிவரை டெல்லி அணியின் வெற்றிக்குப் போராடிய மொரிஸ் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

குஜராத் அணியின் பந்துவீச்சாளரான குல்கர்னி 4 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் சரணடைந்த ஆசிய சம்பியன் இலங்கை...

2024-10-09 23:44:54
news-image

இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைக்...

2024-10-09 20:21:33
news-image

இலங்கையுடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப்...

2024-10-09 19:40:45
news-image

இந்தியாவில் சர்வதேச மாஸ்டர் லீக்; இலங்கை...

2024-10-09 16:52:43
news-image

கட்டாய வெற்றிக்காக இலங்கை, இந்திய மகளிர்...

2024-10-09 14:40:11
news-image

நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66...

2024-10-08 23:48:29
news-image

20இன் கீழ் மத்திய  ஆசிய சங்க...

2024-10-08 23:21:20
news-image

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை...

2024-10-08 16:28:06
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2024:...

2024-10-08 15:00:26
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண பி...

2024-10-08 02:40:08
news-image

அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் ...

2024-10-08 02:03:36
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர்...

2024-10-07 13:52:12