கண­வ­ருடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக 26 வயதுடைய இரண்டு பிள்­ளை­களின் தாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்­டதால் பலத்த தீக்­கா­யங்­க­ளுடன் புத்­தளம் வைத்தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நான்கு நாட்­களின் பின்னர் நேற்று உயி­ரி­ழந்­துள்­ள­தாக புத்­தளம் மற்றும் கற்­பிட்டி பிரி­வுக்­கான திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ.எம். ஹிசாம் தெரி­வித்தார். 

கண­மூலை ரஹூ­மத்­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த  26 வயதுடைய இளம் தாயே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். 

உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவ­தா­கவும்,அவர் சற்று போதைக்கு அடி­மை­யா­கி­யி­ருந்த நிலையில் சம்­பவ தின­மான கடந்த வியா­ழக்­கி­ழமை தனது மனைவி­யிடம் 2ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு தொந்­த­ரவு செய்துள்­ள­துடன் மனைவி அவ்­வாறு அவ­ருக்கு பணம் வழங்­காத நிலையில் அவர் வீட்டை விட்டுச் சென்­ற­தா­கவும்,அதன் பின்­னரே இப்பெண் வீட்­டினுள் சென்று தனது உடம்பில் மண்ணெண்ணெயினை ஊற்றி தீமூ­ட்டிக் கொண்­டுள்­ளளார்.

குறித்த ­பெண்ணின் மரணம் தொடர்பில் இடம்­பெற்ற மரண விசார­ணையின்போது தெரிய வந்­த­தாக திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரி­வித்தார்

. இதனால் பலத்த தீக்­கா­யங்­க­ளுடன் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த குறித்த பெண் சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார். 

நேற்று முன்­தினம் இடம்­பெற்ற மரண விசா­ர­ணை­களின் பின்னர் தீமூட்டிக் கொண்­டதால் ஏற்­பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சட­லத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.