வயலின் இசை கருவியை பெண் ஒருவர் வாசிக்க, அதனை மெய்மறந்து ரசித்து கேட்கும் 11 மாத குழந்தை ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூயோர்க்கில் சேர்ந்த ரேச்சலாற்றே. இவரது மகன் தோமஸ், பிறந்து 11 மாதங்களே ஆகின்றன. சமீபத்தில் ரேச்சல், தோமஸை குழந்தைகளுக்கான இசை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

 

தோமஸ் மற்ற குழந்தைகளுடன் சுற்றித்திரிந்து விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், பெண் இசை கலைஞர் ஒருவர் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். தோமஸ், யாரும் சற்றும் எதிர்ப்பாராத விதமாக அப்பெண்ணின் அருகில் சென்று சிரித்தப்படியே வயலினை கண்களை மூடிக்கேட்டு ரசித்துள்ளான். 

மேலும் அவரது காலுக்கு அருகில் அமர்ந்தபடியே தொடர்ந்து ரசித்து வந்துள்ளான். தோமஸ் வயலின் இசையை கேட்பது இதுவே முதன்முறையாகும். 

ரேச்சல் இதனை தனது கையடக்கதொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.

தோமஸ், பின்னர் அந்த பெண்ணின் கால்களை பற்றிக் கொண்டு அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை தோமஸின் தாயும், அந்த பெண் இசை கலைஞரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.