ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். 

காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகியன இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும். 

காலநிலை மாற்றம் தொடர்பில் 1992 ஆம் ஆண்டு ஐ.நா சபையினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் இடம்பெறும் 21ஆம் மாநாடு இதுவாகும். 

இம் மாநாட்டில் ஐ.நா சபையின் 80 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.