மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால் சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.


எவன்ட் கார்ட் விவ­கா­ரத்தில் திலக் மாரப்­பன அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது மட்­டும்­போ­தாது. மாறாக அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷவும் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டும் என்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்­ளமை குறித்து வின­வி­ய­போதே அமைச்சர் விஜே­தாச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,


நான் அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க தீர்­மா­னிக்க முடி­யாது. மாறாக நான் அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுமே தீர்­மா­னிக்­க­வேண்டும்.


அந்­த­வ­கையில் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய முடி­யாது. மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வ­தைப்­போன்று நாங்கள் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால் சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது.


எமது அர­சாங்கம் அனைத்து விட­யங்­க­ளையும் சட்­டத்­துக்கு உட்­பட்டே முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. நானும் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமை­யவே வேலைத்­தி­ட­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றேன். அவ்­வா­றான நிலையில் யாரோ ஒருவர் கூறு­கின்றார் என்­ப­தற்­காக அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து விலக முடி­யாது.


மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் ஒரு காலத்தில் 60 ஆயிரம் பேரின் உயிர்­க­ளுடன் விளை­யா­டி­யதை மறந்­து­விட்­டனர் போல் தெரி­கின்­றது. அவர்கள் செய்­த­போது ஒன்­று­மில்லை. தற்­போது பெரி­தாக குரல் கொடுக்­கின்­றனர்.


மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வ­தைப்­போன்று முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரை சட்­டத்­துக்கு முர­ணாக கைது செய்­தி­ருந்தால் இன்று அவர்கள் ஒரு பிரச்­சி­னை­யையும் எழுப்­பி­யி­ருக்­க­மாட்­டார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு சட்டத்தை மதிக்காது எதனையும் செய்ய முடியாது என்றார்.


எவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சையில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாரம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.