பிரித்­தா­னிய பழை­மை­வாதக் கட்சி ஐரோப் ­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து எது­வித உடன்­ப­டிக்­கை­யு­மின்றி வெளி­யே­று­வ­தற்­கான செயற்­பாட்டை முன்­னெ­டுக்க  முயற்­சிக்­கு­மானால் அது அந்தக் கட்­சிக்கு அர­சியல் தற்­கொ­லை­யொன்­றா­கவே  அமையும் என அந்தக் கட்­சியின் பிர­தமர் பத­விக்­கான வேட்­பா­ளரும் வெளிநாட்டு செய­லா­ள­ரு­மான ஜெரேமி  ஹன்ட் எச்­ச­ரித்­துள்ளார்.

தெரேஸா மே பிர­தமர் பத­வியை விட்டு வில­கி­ய­தை­ய­டு­த்து அவ­ரது பதவி நிலைக்கு போட்­டி­யிடும் 10 வேட்­பா­ளர்­களில்  ஜெரேமி  ஹன்ட்டும் ஒரு­வ­ராவார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வதைத் தவிர்ப்­பதைவிடவும் எது­வித உடன்­ப­டிக்­கை­யு­மின்றி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது சிறந்­தது என எப்­போதும் பிர­சாரம் செய்து வந்த அவர், ஆனால் பிர­தமர் ஒருவர் பிரித்­தா­னியா  ஐரோ ப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளி­யே­று­வ­தற்கு பரிந்­துரை செய்­வா­ராயின் அவர் பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லா தீர்­மான வாக்­கெ­டுப்­பொன்றை எதிர்­கொள்­வ­தற்கான அபாயம் உள்­ளதால் பொதுத் தேர்­த­லொன்றை நடத்த   நேரிடும் என எச்­ச­ரித்­துள்ளார்.

பொதுத் தேர்­த­லொன்றின் மூலம் பிரித்­தா­னியா உடன்­ப­டிக்­கை­யின்றி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முய ற்­சிப்­பது ஒரு தீர்­வாக அமை­யாது எனத் தெரி­வித்த அவர், அது பழை­மை­வாதக் கட் சிக்கு அர­சியல் தற்­கொ­லை­யா­கவே அமை யும் என்று கூறினார்.

அதே­ச­மயம் பழை­மை­வாத கட்­சியைச் சேர்ந்த பிறி­தொரு வேட்­பா­ள­ரான சுற்­றுச்­சூழல் செய­லாளர் மைக்கேல் கோவ்  பிரித்­தா­னி­யா­வி­லுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய பிர­ஜை­க­ளுக்கு கட்­ட­ண­மின்றி பிரித்­தா­னியப் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க அனு­ம­திப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்                                                  ளார்.

பிரித்­தா­னிய பிர­தமர் பத­விக்கு  அந்­நாட்டு உள்­துறை  செய­லாளர் சஜித் ஜாவித், சுகா­தார செய­லாளர் மட் ஹன்கொக், முன்னாள்  வெளி­நாட்டு செய­லாளர் போரிஸ் ஜோன் ஸன், முன்னாள் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபைத் தலைவர் அனட்றியா லீட்ஸம், முன் னாள்  வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மக்வி, முன்னாள் பிறிக்ஸிட் செய லாளர்  டொமினிக் ராப்,  வீடமைப்பு அமைச்சர் கிட் மெல்தோஸ்  ஆகியோரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.