மட்டக்களப்பு நகர் கண்ணகி அம்மன் ஆலய வீதி களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை இன்று புதன்கிழமை (29) காலையில் இராணுவத்தினர் மீட்டுள்ளனர் .


மட்டு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் சம்பவதினமான இன்று புதன்கிழமை  காலை களப்பு பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களப்பில் கைவிடப்பட் கிளைமோர் குண்டு ஒன்றை கண்டு பிரதி  மேஜருக்கு தெரிவித்தனர்.


இதனையடுத்து இராணுவத்தின் குண்டு செயலலிழக்கும்  பிரிவினர் குறித்து கிளைமோரை மீட்டனர் இது விடுதலைப்புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிளைமோர் என தெரிவித்தனர்.