கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ; பெருந்தொகை தென்னை மரங்களுக்கு சேதம்

Published By: Digital Desk 4

29 May, 2019 | 10:45 AM
image

முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகளால் பெருந்தொகையான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் பழைய முறிகண்டி ஆகிய கிராமங்களில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் இந்த பகுதிகளில் வாழும் மக்கள் தமது வாழ்வாதார பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் இந்த கிராமங்களில் வாழும் மக்களில் கணிசமானவர்கள் காட்டுயானை அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதேவேளை குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் அன்றாடம் காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு புத்துவெட்டுவான் கிராமத்தில் புகுந்த காட்டுயானைகள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த போது அழிவடைந்து மீண்டும் நடுகை செய்யப்பட்ட பெருமளவான தென்னைகளை அழித்துள்ளன.  இவ்வாறு பெருந்தொகையான பயிர்செய்கைகளை யானைகள் அழித்து வருவதனால் தமது வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19