உயிரைப் பணயம் வைத்து 246 கொக்கெய்ன் போதைப்பொருள் பக்கெட்டுகளை குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றபோது குறித்த விமானத்தில் 199 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
குறித்த விமானம் மெக்சிகோ - சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
உடனே விமானத்தை ஹெர்மோசில்லோ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினர். உடனே அங்கு தயாராக இருந்த வைத்தியர்கள் அவரை பரிசோதித்த போது குறித்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குறித்த நபரின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் 246 கொக்கெய்ன் போதைப் பொருள் பக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஜப்பானுக்கு கடத்துவதற்காக அளவுக்கு அதிகமாக கொக்கெய்ன் பக்கெட்டுகளை விழுங்கியிருக்கிறார். அவற்றில் சில பக்கெட்டுகள் பிரிந்து, இரத்தத்தில் போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM