(எம்.எப்.எம்.பஸீர்)

வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து  சி.ஐ.டி. யினர் தொடர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். 

சொத்து குவிப்பு விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும், குறித்த வைத்­தி­ய­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் சட்ட விரோத கருத்­தடை  குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் பொலிஸ் அதி­காரி  ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

கருத்­தடை சத்­திர சிகிச்­சை­களை மேற்­கொண்­ட­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி  தொடர்பில் கடும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக  நேற்று  அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.தேரர்கள், வர்த்­த­கர்கள் உள்­ளிட்ட பலர் இதில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். பல்­வேறு  பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­துடன் இதன்­போது குரு­ணாகல் நக­ரி­லுள்ள வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­தன. 

இத­னி­டையே  வைத்­தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கருத்­தடை செய்­துள்­ளாரா என்­பதை பரி­சீ­லிக்­கு­மாறு வலி­யு­றுத்தி நேற்று மாலை­வரை  122 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. தம்­புள்ளை வைத்­தி­ய­ச­லைக்கும், பொலிஸ் நிலை­யத்­துக்கும் 10 முறைப்­பா­டு­களும் குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லைக்கு   112 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக குறித்த வைத்­தி­ய­சா­லைகள்  அதி­கா­ரிகள் கூறினர். 

அவற்றில் சுமார் 56 முறைப்­பா­டுகள் நேற்று  கிடைத்­த­தாக குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர்  சரத்­வீர பண்­டார குறிப்­பிட்டார். கருத்­தடை செய்­த­தாக முறைப்­பா­டு­களை முன்­வைத்­துள்ள தாய்­மார்­களை விசேட மருத்­துவப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வைத்­தியர் சரத்­வீர பண்­டார குறிப்­பிட்டார். இந்த விசேட மருத்­துவ சோத­னையை விரைவில் ஆரம்­பிக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

 இத­னி­டையே குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரிக்க சுகா­தார அமைச்சு ஆறு பேர் கொண்ட சிறப்பு குழுவை நிய­மித்­துள்­ளது.  சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர்  வைத்­தியர் அனில் ஜாசிங்க  தலை­மையில் இந்த குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 

 இந்த ஆறு பேர் கொண்ட குழுவில்,  ஓய்­வு­பெற்ற பிர­சவ மற்றும் மகப்­பேற்று  விஷேட வைத்­திய நிபுணர்  லக்ஷ்மன் சேன­நா­யக்க,  பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர்  யூ.டி.பி. ரத்­ன­சிறி,  குடும்ப சுகா­தார நிறு­வ­னத்தின் சமூக வைத்­தியர்  சஞ்­ஜீவ கொட­கந்­தகே,  சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர்  எல்.ஏ. பஸ்­நா­யக்க,  மற்றும் விசா­ரணை அதி­காரி  எஸ். ஐ. குண­வர்­தன  ஆகி­யோரும் அங்கம் வகிக்­கின்­றனர். 

 வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக உள்ள முறைப்­பா­டு­களை விசா­ரித்தல்,  மேற்­பார்வை மற்றும் யோச­னைகள் அடங்­கிய  முதற்­கட்ட அறிக்­கையை  ஒரு வாரத்­துக்­குள்ளும், முழு­மை­யான அறிக்­கையை ஒரு மாதத்­துக்­குள்ளும்  இந்த குழு வழங்க வேண்டும் என சுகா­தார அமைச்சின் செய­லாளர் வசந்தா பெரேரா தெரி­வித்தார். 

இத­னி­டையே சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ரு­டைய அனு­மதி இல்­லாமல், தொழில்­நுட்பத் தர­வுகள் தவிர்ந்த ஏனைய தக­வல்­களை வெ ளியி­டு­வ­தற்கு மருத்­துவ நிர்­வா­கி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சுகா­தார அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் சிகிச்சைப் பிரி­வு­களின் நிர்­வா­கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதில் சுகா­தார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த பணிப்புரையை ஏற்று செயற்படாத மருத்துவ நிர்வாகிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய குறிப்பிட்டார்.