ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கெண்டைனர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒரு வழி பாதையில் இடம்பெறுவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாகலையிலிருந்து கொழும்பிற்கு 12 டொன் நிறையுடைய  தேயிலை தூல் ஏற்றி சென்ற லொறியே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கினிகத்தேன 20 மைல் பகுதியில்  விபத்துக்குளாகியுள்ளது.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரினால் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வாகன போக்குவரத்துக்கு தடையேட்பட்டு ஒரு வழி பாதையில் வாகனங்கள் பயணிப்பதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

- நோட்டன் பிரிட்ஜ் நிருபர்