ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஐந்து சந்திப் பகுதியில் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு சிரியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியிருந்தது.
இதனையடுத்து புத்தளம் உள்ளிட்ட நாட்டில் சில இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM