வவுனியா பண்டாரிக்குளம் குளக்கட்டுக்கு செல்லும் வீதியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டிற்கு மதில் அமைத்து வருவதனால் கழிவு நீர் செல்லது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் எமது வீடுகளுக்குள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது . 

இதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அப்பகுதி மக்களால் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை நகரசபை நகர பிதா சு. குமாரசாமியிடம் கையளித்துள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் குளோபல் மில் வீதியிலுள்ள 15 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனி நபர் ஒருவர் தனது காணிக்குள் கழிவு நீர் செல்வதற்கு வழியேற்படுத்தப்படாமல் மதில் அமைத்து வருவதால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அங்கு வசித்து வரும் குடும்பங்களின் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இதனை தடுத்து நிறுத்தி கழிவு நீர் செல்வதற்கு வழி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதியில் வசித்துவரும் மக்கள் கோரிக்கை கடிதம் ஒன்று நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமியிடம் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து நகரசபை உப நகரபிதாவிடம் கேட்டபோது,

பண்டாரிக்குளம் குளோப் மில் வீதியில் கால்வாயை வழிமறித்து மதில் அமைப்பதாக முறைப்பாடு கிராம மக்களில் ஒரு பகுதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைப்பகுதி, சுகாதாரப்பகுதிக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அல்லது எங்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் மதில் அமைக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக நகரசபை உப நகர பிதா சு. குமாரசாமி மேலும் தெரிவித்துள்ளார்.