ஆணைக்­குழு முன் தந்தை மன்­றாட்டம்  எனது மகள் முல்­லைத்­தீவு – முத்­தை­யன்­கட்டு காட்­டுப் ­ப­கு­தியில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயி­ருடன் இருக்­கின்றாள். எனது மகளை மீட்­டுத்­தா­ருங்கள் என்று காணாமல் போயுள்ள பிறேம்நாத் அபி­ராமி (வயது29) என்ற யுவதியின் தந்தை காணாமல்போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­விடம் மன்­றாட்­ட­மா­கக் ­கோரி சாட்­சி­ய­மளித்தார்.

கிளி­நொச்சி கரைச்சி பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் அமர்வில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

கிளி­நொச்சி கரைச்சிப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பிரேம்நாத் அபி­ராமி (வயது 29) ஆகிய எனது மகளை கடந்த 2007ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் விடு­த­லைப்­பு­லிகள் கட்­டாய ஆட்­சேர்ப்பின் போது பிடித்துச் சென்­றனர். பின்னர் 2008ஆம் ஆண்டு வீட்­டிற்கு வந்து சென்றார். அதன் பின்னர் நாங்கள் கிளி­நொச்­சியில் இருந்து இடம் பெயர்ந்து சென்று விட்டோம்.

பின்னர் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் சென்று செட்­டி­குளம் மெனிக்பாம் முகாமில் தங்­கி­யி­ருந்தோம். இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எனது மகளை இரா­ணு­வத்­தினர் செட்­டி­குளம் மெனிக்பாம் வலயம் -4 நலன்­புரி நிலை­யத்­திற்கு கொண்­டு­சென்று உற­வி­னர்­களை தேடி­ய­தாக எனக்கு நன்கு தெரிந்­த­வர்கள் எல்­லோரும் சொன்­னார்கள். ஆனால் எனது மகள் என்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது இரா­ணுவ முகாம்­களில் இருந்து மரக்­க­றிகள் செய்­கின்­றார்கள் . இவ்­வாறு வைத்­தி­ருப்­ப­வர்­களை வைத்தே அவர்கள் இதனைச் செய்­கின்­றார்கள் என நாங்கள் நம்­பு­கின்றோம்.

முத்­தை­யன்­கட்டு காட்­டுப்­ப­கு­தியில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் எனது மக­ளையும் சில பிள்­ளை­க­ளையும் வைத்­தி­ருப்­ப­தாக நான் அறிந்து கொண்டேன். எனது மகள் உயி­ருடன் தான் இருக்­கின்­றார்கள் அவரை எப்­ப­டி­யா­வது மீட்­டுத்­தா­ருங்கள் என தந்தை ஆணைக்­கு­ழவின் முன் மன்­றாட்­ட­மாக சாட்­சி­ய­ம­ளித்தார்.

மீசாலை இரா­ணுவ முகாம் இரா­ணு­வத்­தினர் எனது மகனைப் பிடித்து இரண்டு கை களையும் பின்­பக்­க­மாக தென்னை மரத்­துடன் கட்­டி­வைத்து நாய்க்குச் சாப்­பாடு போடு­வ­து­போல மகனின் கால்­க­ளுக்கு கீழ்­சாப்­பாட்டு பொதியை வைத்து நக்­கிச்­சாப்­பிட வைத்­தனர்' என இரா­ணு­வத்­தி­னரால் பிடிக்­கப்­பட்டு காணா­மற்­போன செல்­வ­ரட்ணம் உத­யராஜ் (வயது 26) என்­ப­வரின் தாயார் கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

காணா­மற்­போ­னோரைக் கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் கிளி­நொச்சி கரைச்சிப் பிர­தேச செய­லாளர் பிரிவில் காணா­மற்­போ­னோரின் உற­வி­னர்கள் சாட்­சி­ய­ம­ளிக்கும் அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே அவர் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

'கிளி­நொச்­சி­யி­லி­ருந்து கடந்த 2005 ஆம்­ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம்­தி­கதி வேலைக்­காக மகன் யாழ்ப்­பா­ணத்­துக்குச் சென்றார். எனது மக­னையும் கஜேந்­திரன் தினேஸ்­குமார் என்ற இரண்டு பேரையும் சேர்த்து டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மீசாலை இரா­ணுவம் பிடித்துச் சென்­றது. மற்ற இரு­வ­ரையும் மறுநாள் கிராம அலு­வலர் முன்­னி­லையில் இரா­ணுவம் விடு­தலை செய்­தது. ஆனால் எனது மகனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்­தி­ருந்­தனர். எனது சகோ­தரி டிசம்பர் மாதம் 30ஆம்­தி­கதி மீசாலை முகா­முக்கு சென்று எனது மகனைப் பார்த்தார்.

மகனின் இரண்டு கைக­ளையும் பின்­பக்­க­மாக தென்னை மரத்­துடன் கட்­டி­வைத்து நாய்க்குச் சாப்­பாடு போடு­வ­து­போல மகனின் கால்­க­ளுக்கு கீழ் சாப்­பாட்டு பொதியை வைத்து நக்கிச் சாப்­பிட வைத்­தி­ருப்­பதை எனது சகோ­த­ரி­யான அக்கா கண்டார்.

எனது மகன் பிடிக்­கப்­பட்­டமை தொடர்பில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு பதிவுசெய்தேன். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 14ஆம் திகதி எனது மகனை மீசாலை முகாமில் இருந்து வேம்பிராய் இராணுவ முகாமுக்கு கொண்டுசென்றனர். அதன் பிறகு மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை' என்றார்