கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லை தரக்கூடிய பிரச்சினைகளில் வியர்க்குருவும் ஒன்று.
கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சினைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்க்குருவைத் தடுக்கலாம்.
* வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்க்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலை கழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தும்.
* சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்க்குருவை போக்கலாம்.
* கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்க்குரு பிரச்சினையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM