தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு

Published By: Daya

28 May, 2019 | 03:28 PM
image

இதய பாதிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் தெற்காசியா முழுவதும் அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் உயிரிழக்கக்கூடும் என்று சர்வதேச வைத்திய ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான அதி நவீன புரோற்றான் டிஜிற்றல் பி. இ. டி. கருவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கருதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது தெற்காசியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்காசியா முழுவதும் இதயநோயால் பிள்ளைகளும், வளர் இளம் பருவத்தினரும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 15 வயது முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதய பாதிப்பு சர்க்கரை நோய் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மக்கள் போதிய அளவிற்கு விழிப்புணர்வை பெற வேண்டும்.

கடந்த காலங்களில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் அதிகளவில் இல்லை. ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. இதற்கான வைத்திய வசதிகளும் தெற்காசிய முழுமைக்கும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இளம் வயதினரும், பதின்ம வயதில் உள்ளவர்களும் இத்தகைய முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதன்மூலம் தொற்றா நோய்களின் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10