தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் முடிவெடுக்கும் என இலங்கை தமிழசுக் கட்கியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னரான சூழலில் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு  அமைச்சர் ரிஷாதட பதியுதீனுக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின் றபோது அதற்கேற்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஒன்றுகூடி முடிவெடுக்கும் நாங்கள் அவசரப்படவில்லை. நிதானமாக முடிவெடுப்போம் என்றார்.