ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறு­வனம், வரை­ய­றுக்­கப்­பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறு­வனம் மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட மிஹின் லங்கா தனியார் நிறு­வனம் ஆகி­ய­வற்றில் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­படும் முறை­கே­டு­களை கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பத­விக்­காலம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த பத­விக்­கா­லத்தை 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்­கப்­ப­டு­வ­தற்­கான விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 

2006 ஜன­வரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜன­வரி மாதம் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் குறித்த நிறு­வ­னங்­களில் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­படும் முறை கேடுகள் குறித்து கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால், 2018 பெப்­ர­வரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

எவ்­வா­றா­யினும் 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறை­வ­டை­ய­வி­ருந்த ஆணைக்­கு­ழுவின் காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அதன்­பின்னர் மீண்டும் அந்தக் காலம் 2019 பெப்­ர­வரி 15ஆம் திக­தி­வரை மீண்டும் நீடிக்­கப்­பட்டு பின்னர் மே மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில் இக்­கா­லத்­தினை மேலும் ஒரு மாத காலம் நீடிப்­ப­தற்­கான விஷேட வர்த்­த­மானி அறி­வித் தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.