ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 60 செயற்கைக்கோள்களுடன் கூடிய ஸ்டார்லிங்க் ஃபால்கான் 9 ராராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதணை படைத்துள்ளது.

முதன் முறையாக 60 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்த நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. 

உலகளாவிய இணையதள அணுகல் சேவைகளுக்காக இந்த 60 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

விண்ணில் பாய்ந்த ஸ்டார்லிங்க் ரொக்கட், 60 செயற்கைக்கோளுடன் நீண்ட ரயில் போல் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

 ஒரே நேரத்தில் இத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல் முறையாக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.