இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி லாவோஸில் நட்பு ரீதியான போட்டியொன்றில் இன்று விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை காற்பந்து கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த போட்டி இடம்பெறுகிறது.

இதையடுத்து எதிர்வரும் 2022 ஆம் ஆணடு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியும் விளையாடவுள்ளது.

அதற்கு தயாராகும் முகமாக இந்த போட்டி அமையும் என்று கூறப்படும் நிலையில் இலங்கை அணிக்கு கோல்கீப்பர் சுஜன் பெரேரா தலைமை தாங்குவதோடு கவிந்து இசான் உதவித் தலைவராக உள்ளார்.

அத்தோடு குறித்த அணிக்கு நிசாம் பக்கீர் தலைமை பயிற்றுவிப்பாளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.