உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் பயிற்சி ஆட்ட இறுதிநாளான இன்றும் இரு ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன. 

அதன்படி பிரிஸ்டலில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 9 ஆவது பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதவுள்ளன.

கார்டிப்பில் 3.00 ஆரம்பமாகவுள்ள 10 ஆவதும் இறுதியுமான பயிற்சிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மொஷ்ரப் மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.