புர்காவை அகற்றி விட்டு கடமைக்கு வருமாறு பணித்த நிலையில், வைத்திய ஒருவர் தனது தொழிலை இராஜினாமா செய்துள்ள சம்பவம் ஒன்று ஹோமாகமை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இறுதியில் ஹோமாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், புர்காவுடன் குறித்த வைத்தியர் தனக்கு சிகிச்சை அளிக்க வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம், புர்காவை அகற்றி விட்டு பணிக்கு வருமாறு குறித்த வைத்தியரை பணித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் முன்னறிவிப்பு இன்றி பணிக்கு வருகைத் தராதிருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் தனது இராஜினாமா கடிதத்தை வைத்தியசாலையின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக  வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.