இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

சவுத்தாம்டனில் நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான உலகக் கிண்ண 9 ஆவது பயிற்சிப் போட்டியில்  திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியும், பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதின.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமன்ன 56 ஓட்டத்தையும், தனஞ்சய டிசில்வா 43 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அடம் ஷாம்பா 2 விக்கெட்டுக்களையும், மிச்செல் ஸ்டாக்ஸ், பெட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், நெதன் லியோன் மற்றும் ஸ்டீப் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதையடுத்து 240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் உஷ்மன் கவாஜா 89 ஓட்டத்தையும், மெக்ஸ்வெல் 36 ஓட்டத்தையும், ஷோன் மார்ஸ் 34 ஓட்டத்தையும் மற்றும் மார்கஸ் ஸ்டோனெனிஸ் 32 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் ஜெப்ரி வெண்டர்ஷி 2 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதிப், மிலிருந்த சிறிவர்தன மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.