வைத்தியர் ஷாபிக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை குறித்த 16 முறைப்பாடுகள்!

Published By: Vishnu

27 May, 2019 | 10:14 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சொத்துக் குவிப்பு விவகாரத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் மொஹம்மட் ஷாபியினால்  சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரிடம் இந்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக குருணாகல் பொலிஸ் நிலையத்திலும் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேக நபரான வைத்தியர் சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டதாக கிடைத்த முறைப்பாடுகளில், 4 முறைப்பாடுகள் அவருடன் சேர்ந்து பனியாற்றியதாக கூறப்படும் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டவை என அறிய முடிகின்றது. ஏனைய முறைப்பாடுகளை 28 - 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே சொத்து குவிப்பு விவகாரத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பின்னணியில் குற்றச்சடடுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியகையுள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத...

2025-03-19 15:48:10
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32