கோடைக்காலங்களில் தெற்காசிய நாடுகளில் வெஸ்ட் நைட்காய்ச்சல் எனப்படும் காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த காய்ச்சல், நுளம்புகளின் வழியாக மனிதர்களுக்கு பரவுவதாகவும், நுளம்புகளின் இருக்கும் west nile virus என்ற கிருமிகளால் இந்த நோய் பரவுகிறது. இதனால் கோடை காலங்களில் நுளம்புகள் முட்டை இடுவதை தடுக்க வேண்டும் என்றும், அதற்குரிய தற்காப்பினை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இத்தகைய காய்ச்சலால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் 7 வயதுடைய பிள்ளை மரணத்தைத் தழுவி இருக்கிறார் என்ற ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த west nile virus என்ற கிருமி பறவைகளிடமிருந்து நுளம்புகளுக்கு வருவதாக மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கிருமி நுளம்புகள் வழியாக மனிதர்களையும், குதிரைகளையும், ஏனைய உயிரினங்களையும் தாக்கி அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் இது மனிதர்களை தாக்கி அவர்களின் இரத்தத்தையும், திசுக்களையும் ஏனைய உறுப்புகளையும் பாதிப்படைய செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு தொற்றக் கூடிய நோய் அல்ல என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இது டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சலிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் காய்ச்சல் பிறகு தலைவலி, சோர்வு, உடல் வலி ,குமட்டல் ,வாந்தி, தோல் தடிப்பு, நிணநீர் சுரப்பிகளில் வீக்கம், சிலருக்கு கழுத்து திருப்ப முடியாதிருத்தல், சிலர் கோமா நிலைக்கு சென்று விடுதல், நடுக்கம், வலிப்பு, பக்கவாதம் போன்ற பல அறிகுறிகளை இந்த காய்ச்சல் ஏற்படுத்தும் என்கிறார்கள். இதற்கு சிகிச்சை பெறுவதை விட ,இந்த பாதிப்பு வராமல் தடுப்பது தான் சிறந்தது என்கிறார்கள்.
எம்முடைய இல்லங்களில் மொட்டை மாடிகளில் நாம் வளர்க்கும் மணி பிளான்ட் என்ற செடிக்காக நாம் வைத்திருக்கும் பானைகளின் தேங்கியிருக்கும் தண்ணீரின் மூலம் கூட இம்மாதிரியான நுளம்புகள் உருவாகும் என்கிறார்கள். அதனால் நுளம்புகள் எம்மை கடிக்க வண்ணம், தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி.
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM