(ஆர்.விதுஷா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நிலையில் ஹொரவப்பொத்தானயில் கைது செய்யப்பட்ட ஐந்து  சந்தேக நபர்களையும் விளக்கமறியலில்  வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   

கெப்பத்திகொல்லாவ  நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஹொரவப்பொத்தான  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  தெரிவித்தார். 

இவர்கள் ஐவரும் கடந்த வெள்ளிக்கழமை கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  அவர்கள் நீதிமன்ற  அனுமதியுடன் 72 மணிநேரம் தடுத்து  வைத்து  விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.