(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபத்தினை கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமையவும்  அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவும், வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பூர்த்தி செய்து உரிய பாடசாலை அதிபர்களுக்கு ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் போது பிள்ளையின் பிறப்பு சான்றிதழ் பிரதியொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விபரங்களை சான்றுப்படுத்தத் தேவையான ஆவணங்களின் பிரதிகளையும் சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்தி அதனுடன் இணைத்து அனுப்பி வைக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.