(எம்.மனோசித்ரா)

குருணாகலில் கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும். அதனால் எந்த பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், 8000 சத்திரசிகிச்சைகளை செய்திருக்கின்றார் என்றால் அவர் 20 வருடங்களுக்கும் அதிகமாக வைத்தியர் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறிருந்தாலும் இத்தனை சத்திரசிகிச்சைகளை செய்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அங்கு புனரமைக்கப்பட்ட வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.