(நா.தினுஷா) 

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால்  முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிப்பதற்கு முன்பதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

அத்துடன் இது தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் இந்த பிரச்சினைக்கு விரைவில்  தீர்வு காணப்பட்டால்  மாத்திரமே  நாட்டின் அடுத்த நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க இலகுவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத்தொடர்பில்  பாராளுமன்றத்தில்  விசாரணைகளை முன்னெடுப்பதை விட  பொலிசார் விசாரணைகளை முன்னெடுப்பதே சிறந்ததாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.