(நா.தினுஷா)

216 வகை மருந்துகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அந்த மருந்து வகைகளில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.  அவற்றை விரைவில் கொள்வனவு செய்வதற்கு  உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார  அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று  சுகாதர அமைச்சர் தலைமையில்  மருந்து விநியோகப்பிரிவு, அரச மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்றது. 

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சேனாரத்ன இந்தப்பணிப்புரையை விடுத்துள்ளார்.