(எம்.நியூட்டன்)

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னரான சூழலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் முன்னாள் போராளிகளைக் கடத்துதல், கைது செய்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த கடத்தல்கள் கைதுகள் தொடர்பில் ஒரு சில முறைப்பாடுகள்  மட்டும் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இதுவரை கிளிநொச்சியில் ஒருவரும் யாழ்ப்பாணம் கல்வியங்காடு மற்றும் மானிப்பாயில் ஒருவரும் சாவகச்சேரியில் இருவரும் என இறுதியாக நீர்வேலியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.