சி.சி.டி.வி விற்பணை நிலையத்தில் தீ விபத்து ; மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 4

27 May, 2019 | 02:10 PM
image

மட்டக்களப்பில் சி.சி.டி.வி.கமராக்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று இன்று (27) திங்;கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்குப் பின்பகுதியில் பார் வீதியிலுள்ள முகம்மட் சபீக் என்பவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (திங்கட்கிழமை) காலை தனது வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்துள்ளதைக் கண்டு மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமரசிறீ மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.ஜி.கீத்தா வத்துரு உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த சி.சி.டி.வி.கமராக்கள் மற்றும் அங்கிருந்த ,இலத்திரணியல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன. முப்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் கடையில் சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்ட  பிரதான ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.

இது நாசக்கார செயலாக இருக்கலாமெனவும் இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31