இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கவுள்ள மோடி இன்றிரவு தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.

இந்திய பாராளுமன்ற தேர்தலில்  மாபெரும் வெற்றிபெற்று, குறிப்பாக குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

கமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதோடு ரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கு வந்திருக்கிறேன் என குறிப்பிட்ட மோடி அகமதாபாத் நகரில் உள்ள பா.ஜ.கவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு திரண்டிருந்த பா.ஜ.கவினர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். 

தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்த. பின்னர், காந்திநகர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.