(செ.தேன்மொழி)

கல்கிரியாகம பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பதகம பகுதியில் தனியார் காணியொன்றில் இன்று அதிகாலை புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுளை மேற்கொண்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பலாகல, கல்கிரியாகம, நச்சாதுவ மற்றும் தேவஹூவ பகுதிகளைச் சேர்ந்த  25 - 52 ஆகிய வயதுகளுக்கிடைப்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மீட்க்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கெகிராவை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.