(க.கமலநாதன்)

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குள் அனுமதியின்றிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை.  சம்பந்தனை இராணுவ முகாமிற்குள் அனுமதித்த சிப்பாயிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .