(இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி கனவில் இருந்துக் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினால்  நாட்டை  ஒருபோதும் முன்னேற்ற முடியாது. 

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் இன்று அரசியல் மேடைகளில் இரு தரப்பிற்கும் அரசியல் பிரச்சாரமாகி விட்டது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்து யாரை  ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும், எந்த அரசாங்கத்தை  ஏற்படுத்த வேண்டும் என்பதை  இறுதி தருணத்தில்   நாட்டு மக்களே  தீர்மானிப்பார்கள். யார்  ஜனாதிபதி என்று  தற்போது    வாய்தர்க்கம் செய்துக் கொள்வதால் எவ்வித பயனுள்ள மாற்றங்களும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெயாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.