(எம்.ஆர்.எம்.வஸீம்)

மதஸ்தலங்களை சோதிக்கும்போது பொலிஸ்மா அதிபரினால் வெளியிட்டிருக்கும் சுற்று நிருபத்தின் பிரகாரம் செயற்படவேண்டும். அதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மதஸ்தலங்களை பாதுகாப்பு பிரிவினர் சோதனை செய்யும்போது அதற்குரிய கெளரவம் பாதிக்கும்வகையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.