முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சென்று தமது கட­மை­களில் ஈடு­பட முடியும் என அம்­பாறை மாவட்ட இரா­ணுவ கட்­டளைத்தள­பதி மஹிந்த முத­லிகே தெரி­வித்தார்.

 கல்­முனை வர்த்­தக சங்­கத்தின் ஏற்­பாட்டில் சிவில் சமூக அமைப்­பி­னர்கள் மற்றும் உலமா சபை­யி­ன­ருக்கும் இரா­ணுவ கட்­டளைத் தள­ப­திக்கும் இடை­யி­லான கல்­முனை மாந­கர பிர­தே­சத்தின் பாது­காப்பு தொடர்­பான விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று  கல்­முனை ஆசாத் பிளாசா வர­வேற்பு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. 

முஸ்லிம் மக்கள் புனித நோன்பு காலத்தில் தமது மார்க்க கட­மை­களை பள்­ளி­வா­சல்­களில் நிறை­வேற்­று­வதில் எழுந்­துள்ள அசௌ­க­ரி­யங்கள் பற்றி  தெரி­வித்த  கருத்­துக்கு  பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே கட்­ட­ளைத்­த­ள­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்றும் போது, 

குர்­ஆ­னிலோ அல்­லது எந்த மதத்­திலோ யாரையும் கொல்­லும்­படி கூற­வில்லை. ஒருவர் இன்­னொ­ரு­வரை கொன்­று­விட்டு எவ்­வாறு சுவர்க்கம் செல்ல முடியும்?. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளா­கிய நாங்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்தோம். இதனை குழப்­புவோர் வேறு நபர்கள். நான் இஸ்லாம் மதத்தை விமர்­சிக்­க­வில்லை எனக்கு நண்பர் ஒருவர் சொன்னார் மற்ற மதத்­த­வர்­களை கொன்றால் சுவர்க்­கத்தில் 72 மனை­விமார் கிடைப்பர்  என்று. இது ஒரு சோடிக்­கப்­பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு மனைவியை வைத்துக் கொண்டு வாழ்வதற்கே முடியாமல் உள்ளது  என்றார்..