இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தூதுக் குழுவினர் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
கடந்த உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்து மீண்டும் எழுந்திருக்கும் இலங்கை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட தூதுக் குழுவினர், சகோதர பௌத்த நாடு என்ற வகையில் எப்போதும் தாம் இலங்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தேரர்களின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி பௌத்த நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால நெருங்கிய உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்தார்.
Phசய டீhயறயயெமாநஅயமாரn றயவ ஆயாநலழபெ தேரரின் தலைமையில் தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட 70 பேர் கொண்ட தூதுக் குழுவினர் கடந்த 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன்இ கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வெசாக் கொண்டாட்டங்களையும் பார்வையிட்டனர்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு விகாரைகளுக்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
தாய்லாந்து பௌத்த தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பில் தாய் ஸ்ரீ லங்கா பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் விகாராதிபதி சங்கைக்குரிய ராஸ்ஸகல சீவலி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM