கர்ப்ப காலத்தில் பெண்­களின் வயிற்றின் வெளிப்­புற தோலில் தழும்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. பிர­ச­வத்தின் பின்­னரும் சிறிது காலம் இவ் அடை­யாளம் நீடிப்­ப­துண்டு. பெண்கள் பொது­வாக தமது அழகு பற்றி அதிகம் சிந்­திப்­ப­வர்கள். ஆண்­களை விட அழகு பற்­றிய அக்­கறை இவர்­களில் அதிகம். அதுவும் இன்­றைய நவீன உலக விளம்­பர மாயையில்  எடு­பட்டு தமது அழகை மிகை­யாக காட்ட பல்­வேறு அழகு சாத­னங்­களை உப­யோ­கிக்­கின்­றனர்.

முகத்தில் ஒரு சில பரு அல்­லது கரும்­புள்ளி ஏற்­பட்டால் கூட மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கின்­றனர். ஆணா­திக்க உலகில் பெண்கள் அழகு பது­மை­க­ளாக நோக்­கப்­ப­டு­வதும் இதற்கு காரணம். நவீன உலகம் விளம்­பரம் மூலம் இன்று ஆண்­க­ளையும் கூட அழகு தொடர்­பாக ஆக்­கி­ர­மித்­துள்­ளது.

அழகு அவ­சி­ய­மா­னது தான். இயல்­பான இயற்­கை­யான அழ­குடன் உடலை துப்­பு­ர­வா­கவும் ஆரோக்­கி­ய­மா­கவும் வைத்­தி­ருந்தால் போது­மா­னது. அலங்­கா­ரங்கள் எல்லாம் இரண்டாம் பட்­சமே. நான் இதைக் கூறும் போது பல­ருக்கு பிடிக்­காது என்­பதை அறிவேன்.

பெண்­களின் வயிற்று சரு­மத்தில் ஏற்­படும் அடை­யா­ளங்கள் அப்­ப­டி­யொன்றும் அலங்­கோ­ல­மா­னவை அல்ல. அவை கூட ஒரு­வித அழ­குதான். ஒரு­சி­லரில் தான் சற்று அதி­க­மான தழும்­புகள் தோன்­று­வ­துண்டு. இவற்றால் எது­வித தீமையும் கிடை­யாது. இது ஒரு நோயு­மல்ல. எனவே, பெண்­களே இதைப்­பற்றி அதிகம் அலட்டிக் கொள்­ளா­தீர்கள். உங்கள் அழகை இவை குறைக்கும் என்று கரு­தினால் அதை மறைத்து ஆடை அணி­யுங்கள். இவ் அடை­யா­ளங்கள் காலப்­போக்கில் மறைந்து விடும். அடுத்­த­டுத்து குழந்தை பெறு­ப­வர்­களில் தோல் சுருக்கம் நீடிப்­ப­துண்டு. இது தீமை­யா­ன­தல்ல.

அடை­யா­ளங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம்

கர்ப்ப காலத்தில் கர்ப்­பப்­பையுள் குழந்தை வளர வளர அது விரி­வ­டையும். கர்ப்­பப்பை விரி­வ­டையும் போது அதற்கு இடம் கொடுப்­ப­தற்­காக வயிற்று தசை­களும் விரி­வ­டை­கின்­றன. இதன் பய­னா­கவே தோற்­ப­கு­தியும் விரிந்து அடை­யா­ளங்கள் ஏற்­ப­டு­கின்­றன. பொது­வாக இவ் அடை­யா­ளங்கள் வயிற்றுப் பகு­தியில் ஏற்­ப­டு­கின்ற போதிலும் சிலரில் இவை இடுப்பு, தொடை உள்­ளிட்ட பிற பகு­தி­க­ளிலும் ஏற்­ப­டலாம். இவை பாரிய தழும்­பு­க­ளாக மாறு­வ­தில்லை. பிர­­சவத்தின் பின்னர் கர்ப்­பப்பை சுருங்கும் போது வயிறும் ஒடுங்கும். விரி­வ­டைந்­தி­ருந்த தசை இழை­யங்கள் கிட்­டத்­தட்­ட­­ப­ழைய நிலைக்கு திரும்­பி­னாலும் விரிந்து சுருங்­கிய சரும பகு­தியில் அடை­யா­ளங்கள் நீடிக்கும். இவை அசிங்­க­மா­னவை அல்ல. அழ­குக்கு பாத­க­மா­ன­வை­யு­மல்ல.


யாருக்கு அதிக தழும்­புகள் ஏற்­ப­டு­கின்­றன?

ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்­தது போல இளவயதில் கருத்­த­ரிக்கும் போது அடை­யா­ளங்கள் எற்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் அதிகம். இவர்­க­ளது சருமம் மென்­மை­யாக இருப்­பதே இதற்கு காரணம். கர்ப்ப காலத்தில் அதிக எடை­யு­டையோர் ஒன்­றிற்கு மேற்­பட்ட சிசுக்­களை கர்ப்­பப்­பையில் ஒரே சூலில் சுமப்­ப­வர்கள், எடை அதி­க­ரித்­த­தான குழந்­தையை சுமப்­ப­வர்கள், பன்னீர்க்குடத்தில் அதி­க­ளவு திரவம் கொண்­டி­ருப்­ப­வர்கள் என்­போரில் கூடு­த­லான தழும்பு ஏற்­ப­டலாம். இத்­த­ழும்­புகள் இயற்­கை­யான சரும நிறத்தை விட வெளி­றிய நிறத்தில் தேமல் போல இருக்கும்.


சிகிச்சை

இது ஒரு நோயல்ல என்­பதால் இதற்கு எது­வித சிகிச்­சையும் அவ­சி­ய­மில்லை. சிலர் அழ­குக்­காக சில ஸ்கின் கிறீம்­களை பாவிப்பார்கள். எனினும் அவசியமில்லை. சற்று ஈரப்பதமாக வைத்திருக்கும். இத்தழும்புகள் பெரும்பாலும் ஒரு வருடத்துக்குள் வெகுவாக குறைந்து சிலரில் மறைந்து விடும். எனவே, இதை அழகோடு தொடர்புபடுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகாதீர்கள். இயற்கையோடு நிகழும் மாற்றங்களை அனுசரித்து, பழகிக் கொள்ளுங்கள்.


(வைத்தியர்: ச. முருகானந்தன்)