பெரு நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8.0 ரிக்டெர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 115 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் தெரியவராத நிலையில், சுனாமி எச்சரிக்க‍ை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.