அத்துரகிரிய மற்றும் தமன பகுதிகளில் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துரகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடுவலை வீதியில் பயணித்த இரண்டு முச்சக்கரவண்டிகளும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீதியில் இருந்து பிரதான வீதிக்குள் நுளைந்த காருடன் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மலபே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

மற்றும், தமன பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட ஏராகம - வரிபதன்சேன வீதியில் ஏராகம நோக்கி இருவருடன் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதன் போது பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்  தமன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வரிபதன்சேன பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனத் தெரிவியவந்துள்ளது.