சிலாபம், திகன்வெவ பகுதியில் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர் திகன்வெவ, பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.