மூன்றாவது நடுவர் முறை மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழந்த முதல் வீரர் நானே என இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  தெரிவித்தார்.

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 கிரிக்கெட்டில் தொழில்நுட்பமானது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் மூலம் ஆட்டமிழந்த முதல் நபர் நான்தான் என அவர் தெரிவித்தார்.