உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

இவர்­க­ளுக்கும் தடை­செய்­யப்­பட்ட தெளஹீத்  ஜமாஅத் அமைப்­புக்கும் மற்றும் அர­சி­யல்­வா­திகள், கோடீஸ்­வ­ரர்கள் ஆகி­யோ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்றது. நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய, இது­தொ­டர்­பான விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பல்­வேறு தொலைத்­தொ­டர்பு நிலை­யங்­களில் இருந்து இது­கு­றித்த விப­ரங்கள்  திரட்­டப்­பட்­டுள்­ளன என்றும் கூறினார்.   

இதே­வேளை, பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் 8 சிம்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து, அவ­ரது சிம்­ அட்டைகளை ஆராய்ந்­த­தை­ய­டுத்து அவ­ருடன் தொடர்­பி­லி­ருந்த, மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் நிஜாம் என்ற கணனி இயக்­குநர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் பெருங்­கோ­டீஸ்­வ­ர­ராவார். காத்­தான்­கு­டியைச் சேர்ந்த இவர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயின்றும் வரு­கிறார்.

மேலும் ஒரு கோடீஸ்­வரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வெளி­நாட்டு வங்கி ஒன்றில் கணக்கு வைத்­துள்ளார்.  இவ­ருக்கு எவ்­வாறு இந்­த­ளவு தொகை பணம் வந்­தது என்­பதை அவரால் தெளி­வு­ப­டுத்த முடி­யா­துள்­ளது என்ற அவர், மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்­றிய நிலையில் கைதான நிஜாம், சிரி­யா­வி­லுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்­கத்­துடன் நேரடி தகவல் தொடர்­பு­களை பேணி­வந்­தவர்.

இத­னி­டையே, ஹொர­வ­பொத்­தா­னையில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் ஐவரும் சஹ்­ரா­னுடன் நேரடி தொடர்­பு­களைப் பேணி­வந்­த­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர். இவர்­களின் வங்­கிக்­க­ணக்கில் ஒரு பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பணம் இருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னு­டனும், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனும் நேரடித் தொடர்பை பேணி­வந்த நௌபர், சக்­கி­ரியா, ஜெய­னுதீன், இர்ஷான், ஜஸ்மின் ஆகிய ஐவரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர், கைதா­ன­வர்­களில் ஹொர­வ­பொத்­தானை செய­ல­கத்தில் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­யாற்றும் ஒருவர், இரு அரச ஆசி­ரி­யர்கள், கிவு­லு­கட அரபிக் கல்­லூ­ரியைச் சேர்ந்த இரு ஆசி­ரி­யர்கள் என ஐவர் அடங்­கு­கின்­றனர். 

இவர்கள் அநு­ரா­த­பு­ரத்­திலும் திருகோணமலையிலும் தீவிரவாதம் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களின் வங்கிக்கணக்கில் பெருந்தொகைப்பணம் உள்ளது. மேலும், இந்த சந்தேக நபர்கள் ஹொரவபொத்தானை காட்டுக்குள் ஆயுதப் பயிற்சியும் பெற்றுள்ளனர் என்றும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.